‘குட்’ டாக்டரும்... ‘குட்கா’ டாக்டரும்! - விஜயபாஸ்கரை விளாசிய தினகரன்

பெரும் போராட்டத்துக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவின் மூலம் டி.டி.வி.தினகரன் நடத்திய நிகழ்ச்சியாலும், அதற்குப் போட்டியாக அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய விழாவாலும் புதுக்கோட்டை மாவட்டம் பரபரத்தது.

தினகரனால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நிகழ்ச்சிகளில் சுலபமாகப் பங்கேற்க முடிந்தாலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் நுழையவே முடியவில்லை. போலீஸார் மூலம் அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த நெருக்கடிகளே அதற்குக் காரணம். புதுக்கோட்டை மாவட்டத்தில் தினகரன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்காக, அ.ம.மு.க-வின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் பரணி கார்த்திகேயன் பலமுறை முயற்சி செய்தும், போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. கடைசியில், நீதிமன்ற உத்தரவுபெற்று கடந்த 15-ம் தேதி புதுக்கோட்டை திருவப்பூர் அருகேயுள்ள நத்தம் பண்ணையில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை அ.ம.மு.க-வினர் பிரமாண்டமாக நடத்தினர். புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலை நெடுகவே, ‘நாளைய முதல்வரே!’, ‘சிம்மசொப்பனமே!’ என தினகரனுக்கு விதவிதமான கட்-அவுட்டுகள் வைத்து அ.ம.மு.க-வினர் அதகளப்படுத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick