ஆபத்தான மருந்துகளுக்குத் தடை! - அதிரவைக்கும் பின்னணி

‘இத்தனை நாட்களாக இவ்வளவு ஆபத்தான மருந்துகளையா உட்கொண்டிருந்தோம்’ என்று அதிர்ச்சியடையும் அளவுக்கு 328 பிரிவுகளைச் சேர்ந்த மருந்து, மாத்திரைகளைத் தடை செய்துள்ளது மத்திய அரசு. இனி, இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து, மாத்திரைகளை உற்பத்தி செய்யவோ, விற்கவோ, முடியாது. வலி நிவாரணிகள், சரும நோய் க்ரீம்கள், சர்க்கரை நோய் மருந்துகள், சுவாசக் கோளாறுகளுக்கான மருந்துகள், வயிறு பிரச்னைகளுக்கான மருந்துகள் போன்றவை இதில் அடக்கம். இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்ற சட்டப் போராட்டத்தை இப்போது இந்த அறிவிப்பு மூலம் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது, மத்தியச் சுகாதார அமைச்சகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick