ஆஸ்திரேலியா போன கல்லிடைக்குறிச்சி நடராஜர்!

மீட்டு வருவாரா பொன்.மாணிக்கவேல்?

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் 600 ஆண்டுகள் பழைமையான நடராஜர் ஐம்பொன் சிலை 36 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்டது. அது, ஆஸ்திரேலியாவில் ஓர் ஆர்ட் கேலரியில் இருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘‘அந்தச் சிலையை விரைவில் மீட்டுவர தமிழக சிலைக்கடத்தல் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக் குறிச்சியில் குலசேகரமுடையார் அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயில் உள்ளது. இது, குலசேகர பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. 1982 ஜூலை 5-ம் தேதி, இந்தக் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த நான்கு சிலைகளைத் திருடிச்சென்றனர். 600 ஆண்டுகள் பழைமையான இரண்டரை அடி உயரமுள்ள ஐம்பொன் நடராஜர் சிலை, இரண்டு அடி உயரமுள்ள சிவகாமி அம்மன் சிலை, ஒன்றரை அடி உயரமுள்ள மாணிக்கவாசகர் சிலை, ஓர் அடி உயரமுள்ள ஸ்ரீபலி நாயகர் சிலை ஆகியவையே திருடிச் செல்லப்பட்டவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick