கழுகார் பதில்கள்!

ஆர்.அசோகன், திருச்சிராப்பள்ளி-3.

சுதந்திரப் போராட்ட முன்னணி வீரர் வ.உ.சி போன்றவர்களைக்கூடச் சாதியத் தலைவர்கள் வரிசையில் சேர்த்துவிட்டார்களே... எங்கே போகிறோம் நாம்?


இவராவது பரவாயில்லை, ஒரே ஒரு சாதியில்தான் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ராஜராஜ சோழனின் பாடுதான் மிகமிகப் பரிதாபம். கிட்டத்தட்ட ஆறுக்கும் மேற்பட்ட சாதியினர், ‘எங்களின் மூதாதையரே’ என்று அவருடைய பெயருடன் தங்களின் சாதிப் பெயரைச் சேர்த்து ஃப்ளெக்ஸ் எல்லாம் வைத்துக் கொண்டாடுகி ன்றனர். ‘வரலாற்று நாயகர்களாக நிற்பவர்கள் அனைவருமே சாதியால் சாதித்தவர்கள் அல்ல, சாதியைத் தாண்டியதால் சாதித்தவர்கள்’ என்பதை உணரும்போதுதான், நாம் தலை நிமிரமுடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick