மிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை!

சுழல் நாற்காலியில் வந்தமர்ந்த கழுகார், ‘‘ ‘ஆறுச்சாமி வந்துட்டாம்லே...’ என்று மிரட்டுகிறது ‘சாமி ஸ்கொயர்’ ட்ரைலர். ஆனால், நிஜ ஆறுச்சாமியோ தினம் தினம் மிரட்டப்படுகிறார்’’ என்று இன்ட்ரோ கொடுத்தார்.

‘‘யாரய்யா இந்த நிஜ ஆறுச்சாமி’’ என்றோம்.

‘‘வேறு யார்? எடப்பாடி பழனிசாமிதான். தினம் தினம் ஏதாவது ஒரு குடைச்சலில் சிக்கிக்கொள்கிறார் மனிதர். முதலில் அவருக்கே ஏகப்பட்ட குடைச்சல். ரோடு கான்ட்ராக்ட் தொடங்கி, எல்லாவற்றையும் கண்கொத்தி பாம்பாகப் பார்த்துக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சி மற்றும் சமூக நல அமைப்புகள், குத்திக் குடைய ஆரம்பித்துவிட்டன. நீதிமன்றம் வரை இழுத்துப்போட்டு உண்டு இல்லை என்றாக்கிக்கொண்டுள்ளனர். இதற்கு நடுவில் ரெய்டு, வம்பு, வழக்கு என்று தலைக்கு மேல் கத்திகளாகத் தொங்குகின்றன.’’

‘‘ம்க்கும்... நீர் ஏதோ எடப்பாடி பழனிசாமிக்கு வக்காலத்து வாங்குவது போலல்லவா பேசுகிறீர். அவராவது, மிரட்டப்படுவதாவது. மனிதர், கல் மாதிரியல்லவா அசையாமல் இருக்கிறார்’’

‘‘வெளியில் பார்ப்பது ஒரு ரூபம்... உள்ளுக்குள் இருப்பவை பல ரூபங்கள். உண்மையில் மனிதர் நொந்து போயிருக்கிறார். காப்பாற்றிவிடும் என நம்பியிருந்த டெல்லிச்சாமியே கொஞ்ச காலமாக குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருப்பதால், தன் ஆட்களை விட்டு திருப்பித் தாக்கும் வேலைகளைச் செய்து பார்க்கிறார். ஆனால், எதுவும் எடுபடுவதாகத் தெரியவில்லை. அடுத்தடுத்து அம்புகளைப் பாய்ச்சுவதில் டெல்லிச்சாமி குறியாகவே இருக்கிறது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick