மினி மீல்ஸ் | Political Bit News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மினி மீல்ஸ்

தங்கவேலன் தனி ஆவர்த்தனம்!

மு
ன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் மகன் திவாகரன், ராமநாதபுரம் தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்தார். இவரை நீக்கிவிட்டு அந்த இடத்தில் மாவட்டப் பொறுப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ காதர் பாட்சாவின் மகன் முத்துராமலிங்கத்தை நியமித்தார் ஸ்டாலின். அன்றிலிருந்து தன் ஆதரவாளர்களுடன் தனி கோஷ்டியாகச் செயல்பட்டு வருகிறார் தங்கவேலன். தனக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த கருணாநிதியின் நினைவுப் பேரணியில்கூட அவர் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக தி.மு.க-வின் கண்டன ஆர்ப்பாட்டம் செப்டம்பர் 18-ம் தேதி ராமநாதபுரத்தில் நடந்தது. அதில் பெரும்பகுதி கட்சியினர் பங்கேற்ற நிலையில், தன் ஆதரவாளர் சிலருடன் அங்கு வந்தார் தங்கவேலன். மேடைக்கு வருமாறு மைக் மூலமும் நேரிலும் அவருக்கு அழைப்பு விடப்பட்டது. ஆனாலும், சிறிது நேரம் மேடைக்குக் கீழேயே நின்றுவிட்டுச் சென்றார். இடைப்பட்ட நேரத்தில் தங்கவேலனின் ஆதரவாளர்கள், அவரின் மகன் திவாகரன் தலைமையில் கட்டுப்பாடு இன்றி கோஷம் போட்டபடி மேடையில் இருந்தவர்களுக்குக் கட்டை போட்டுக்கொண்டிருந்தனர்.

பையனுக்கு சீட்டு... இல்லைன்னா வேட்டு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick