அமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்!

ஹெச்.ராஜா பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வெறுப்பு அரசியல் அமிலத்தை அத்தனை பேர் முகத்திலும் உமிழ்கிறது என்பது அரசியல் பாலபாடம் படிக்காதவர்களுக்குக்கூடத் தெரியும். அப்படியானால், ஹெச்.ராஜாவுக்குத் தெரியாதா? தெரிந்தும் ஏன் அப்படிப் பேசுகிறார்? தமிழர்கள் மதிக்கும் பெரியார் முதல் அத்தனை பேரும் நம்பிக்கை வைத்திருக்கும் நீதிமன்றங்கள் வரை எல்லோரையும், எல்லாவற்றையும் மோசமான வார்த்தைகளால் ஏன் அவர் அர்ச்சிக்கிறார்? போலீஸையும் நீதிமன்றத்தையும் நாக்கூசும் வார்த்தைகளால் திட்டியவர், ‘‘நான் அப்படிப் பேசவே இல்லை’’ என மறுத்தார். அடுத்த நாளே இன்னொரு கூட்டத்தில், அறநிலையத் துறையினரைக் கீழ்த்தரமாக விமர்சிக்கிறார்.

தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான், வண்ணை ஸ்டெல்லா என மேடைப் பேச்சாளர்கள் மட்டுமே ஆபாசமாகவும் வன்மமாகவும் பேசிய காலம் மாறி, முன்னணித் தலைவர்களே அப்படிப் பேசுவதாக அரசியலின் முகம் மாறியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick