“ரகசியத் தடைகளை மீறுவோம்!” - கமல் ஹைடெக் ஆலோசனை

பிக்பாஸ்-2 சீஸனுக்குப் பிறகு சற்றே டல்லடித்த கமல்ஹாசன், மீண்டும் மக்கள் நீதி மய்யத்தில் பிஸி. கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில், மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு இரண்டு நாள்கள் பயிலரங்கம் நடந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்புக்குப் பிரசார ஆலோசகராகப் பணியாற்றிய அவினாஷ் இரகவரப்பு, மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கட்சியின் தலைமை அலுவலகம் ஒரே இடத்தில்தான் அமைய வேண்டும் என்ற மரபை முறியடித்து, தமிழகம் முழுவதும் நான்கு இடங்களில் (சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி) கட்சியின் தலைமை அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களுக்கும் கமல் சென்று மக்களை நேரடியாகச் சந்தித்துக் குறைகளைக் கேட்பார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick