“விஜயபாஸ்கரை விரைவில் கைதுசெய்வோம்!”

எச்சரித்த தி.மு.க-வினர்

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரைச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன், தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் மறைமுகத் தொடர்பில் இருப்பதாகக் குற்றச்சாட்டு தொடர்கிறது. ரெய்டு, ஊழல் புகார் என்று அடுத்தடுத்து விஜயபாஸ்கர் சர்ச்சைகளில் சிக்கியுள்ள சூழலில், எம்.எல்.ஏ ரகுபதி தலைமையில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், ‘அ.தி.மு.க அமைச்சர் மற்றும் நிர்வாகிகளிடம் சொந்தக் காரியங்களுக்காக எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது’ என கருணாநிதிமீது தி.மு.க-வினர் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்வதாகத் தீர்மானம் நிறைவேற்றினர். இந்த ஷாக் குறைவதற்கு முன்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டமும் நடத்தினர் தி.மு.க-வினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick