அமைச்சர் காமராஜிடம் மோதினார்... சிறைக்கு அனுப்பப்பட்ட ராணி!

மிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வீட்டில் வேலை செய்த பெண், அமைச்சர் வீட்டின் முன்பு அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி வடக்கு வீதியில் அமைச்சர் ஆர்.காமராஜின் வீடு உள்ளது. செப்டம்பர் 16-ம் தேதி, வீட்டில் அமைச்சர் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த ராணி என்ற பெண், அமைச்சரைப் பற்றித் தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்னர், மண்ணைத் தூற்றிச் சாபம் விட்டார். அப்போது பிரபாகர் என்ற செக்யூரிட்டி, அந்தப் பெண்ணைப் பிடித்து இழுத்து அடித்தார் என்று நடந்த சம்பவத்தை நம்மிடம் விவரித்தார்கள் அந்தப் பகுதி மக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick