ஆஹான்

பொம்மையா முருகன்
அடுத்து, ஆளும் அரசின் தொடர் மின்வெட்டைக் கண்டித்து முதல்வர் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார் என அராஜக தி.மு.க-வுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Rajagopal Subramaniam
‘வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசித் தேடிவருகிறார்கள்’ என்பது ஒரு நியூஸ் டெம்ப்ளேட், அவ்வளவுதான். அதுக்காக போலீஸ் வலையை வச்சுக்கிட்டா திரிவாங்க? தனிப்படை, வழக்கு எல்லாம் பொதுமக்களைத் திருப்திப்படுத்த மட்டும்தான். பேக்கரி டீலிங்லாம் டாப் லெவல்ல முடிஞ்சுருக்கும்.

Karthik Karthik

மக்கள் கேட்க நினைத்த கேள்வியைத்தான் அந்த ஆட்டோ டிரைவர் கேட்டார். அவர் சாமான்யன் என்பதால் அதிகம் கவனிக்கப்படவில்லை. அதே கேள்வியை ஒரு பிரபலம் கேட்டிருந்தால் வைரலாகியிருக்கும். அவர் வீட்டில் ரெய்டும் நடந்திருக்கும்! தன்னை அடித்த கட்சிக்காரர்கள் தன் வீடுதேடி வந்தபோது வரவேற்றதுதான் இந்த மண்ணின் பண்பாடு. ஆனால், தமிழிசையால் ஸ்வீட் கொடுக்க முடிந்ததே தவிர, பதில் கொடுக்க முடியவில்லை. தேர்தல் வரும்போது விஸ்வரூபம் எடுக்கும் அதே கேள்வி!

மாயோன்
எடப்பாடி, ஓ.பி.எஸ் போன்ற அடிமைகள், ஜெயலலிதாவை மறந்துபோவதில் ஆச்சர்யமில்லை. ஜெ. போட்டோக்களை போஸ்டர்களில் குறைத்துத் தங்களுக்குப் பெரிய கட்அவுட் வைத்துக்கொள்வதுகூட ஆச்சர்யமில்லை. ஆனால், தி.மு.க-வில் சொந்த மகன் கட்சித் தலைவராக இருக்கும்போதே, கருணாநிதியின் போட்டோ ஸ்டாம்ப் சைஸில்கூட இல்லாமல் போஸ்டர் வருவதுதான் ஆச்சர்யம்.

Sundar Rajan
கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து கடந்த மூன்று மாதங்களில் ஒரு யூனிட் மின்சாரம்கூட வரவில்லை - தமிழக அரசு

இதை நாங்க எப்பவோ சொல்லிட்டோம் - மக்கள்

Abdul Hameed Sheik Mohamed

ஜெயலலிதா சசிகலாவை போயஸ் கார்டனைவிட்டு அனுப்பி, மறுபடி சேர்த்து, மறுபடி வெளியேற்றி... தீபா கார் டிரைவர் ராஜாவைக் கட்சியை விட்டு வெளியேற்றி, மறுபடி சேர்த்து, மறுபடி வெளியேற்றி... வரலாறு இப்படியே போய்க்கிட்டு இருந்தா இதற்கெல்லாம் ஒரு முடிவு வேணாமா?

Swara Vaithee
இன்னைக்கு பெட்ரோல் போடப் போனப்ப, ‘‘என்ன ஜீ, அந்த பெட்ரோல் பங்க்லலாம் லிட்டர் நூறு ரூவாய்க்கு வித்துக்கிட்டு இருக்கான். நீங்க இன்னும் 88-லயே இருக்கீங்க’’ன்னு கேட்டுட்டு வந்துட்டேன்.

# இந்தியாவோட வளர்ச்சில நமக்கும் பங்கு இருக்குல்ல!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick