“நீதி கிடைக்காததால் வீதிக்கு வந்தோம்!”

கேரளாவில் போராடும் கன்னியாஸ்திரிகள்

‘‘தேவாலய வரலாற்றில் இது மிகமுக்கியமான போராட்டம். அநீதிக்கு எதிரான போராட்டத்தில் தோற்றுப் போய் பல கன்னியாஸ்திரிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சில கொலை வழக்குகளும் தற்கொலை சம்பவங்களாகச் சத்தமில்லாமல் முடிக்கப்பட்டுள்ளன. அப்படி இறந்தவர்களின் ஆன்மாதான் எங்களுக்குப் போராடும் வலுவைத் தந்துள்ளது’’ என்கிறார் சகோதரி இமல்டா.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் குருவிளங்காடு கிராமப் பள்ளியில் ஆசிரியையாகச் சேவை செய்த கன்னியாஸ்திரி ஒருவர், ‘ஜலந்தரில் பிஷப் பதவி வகிக்கும் ஃப்ரான்கோ முலக்கல், என்னை 13 முறை வன்புணர்வு செய்தார்’ என்று கொடுத்திருக்கும் புகார், இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஜூன் 27-ம் தேதி புகார் அளித்தார் கன்னியாஸ்திரி. ஆதாரங்கள் வலுவாக இருந்ததால், பிஷப்புக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது போலீஸ். ஒரு போலீஸ் படை ஜலந்தர் சென்று பிஷப்பை விசாரித்தது. அதன்பின் எந்த நடவடிக்கையும் இல்லை. பொறுமையிழந்த அந்தக் கன்னியாஸ்திரி, வாடிகன் கத்தோலிக்கத் திருச்சபைக்குக் கடிதம் எழுதினார். வாடிகன் எடுத்த நடவடிக்கைக்குப் பின், செப்டம்பர் 13-ம் தேதி, பிஷப் ஃப்ரான்கோ தன் பொறுப்பை மற்றொரு நபரிடம் தற்காலிகமாக ஒப்படைத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick