மிஸ்டர் மியாவ்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குநர் பாரதிராஜா, விஜய், பிரியதர்ஷினி ஆகியோர் தனித்தனியாக இயக்க இருப்பதாக அறிவித்தனர். இவற்றில், பிரியதர்ஷினி இயக்கும் படத்துக்கு ‘தி அயர்ன் லேடி’ எனப் பெயர் வைத்துள்ளனர். இதில், ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார். வரலட்சுமிக்கு படத்தில் ஒரு முக்கியமான ரோல் இருக்கிறதாம். 

இயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு, மொரீஷியஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.   

‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகை சாக்‌ஷி அகர்வால் இந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று அஜித்தை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பு போட்டோவை ‘பிக்கஸ்ட் ஃபேன் மொமன்ட்’ என்ற வாசகத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick