மணக்குள விநாயகர் கோயிலில் பல கோடி ரூபாய் முறைகேடு!

களமிறங்குவாரா கிரண் பேடி?

ன்கொடை நிதியில் முறைகேடு உள்பட புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகர் கோயிலின் புகழுக்குக் களங்கம் ஏற்படும் வகையில், பல விவகாரங்கள் நடந்தேறிவருகின்றன. இவற்றுக்கு, இந்தக் கோயிலின் அறங்காவலர் குழுவில் இருப்பவர்களே காரணமாக இருக்கிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய குற்றச்சாட்டாக எழுந்துள்ளது.

நம்மிடம் பேசிய புதுவை இந்து அறநிலையத் துறை அதிகாரி ஒருவர், “அறநிலையத் துறையின் கீழ்வரும் கோயில்களில், நிதியைக் கையாள்வதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அதற்காகவே, இத்தகைய கோயில்களில் அறங்காவலர் குழு ஒன்றை அரசு அமைக்கும். அந்தக் குழு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசால் மாற்றியமைக்கப்பட வேண்டும். இப்படி மாற்றியமைக்காமல் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென்றால், அமைச்சரவை ஒப்புதலுடன் கவர்னரின் இறுதி முடிவுக்கு அனுப்ப வேண்டும். இந்த விதிகள் அனைத்தும், மணக்குள விநாயகர் கோயிலில் மீறப்பட்டுள்ளன. 2001-ல் நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்கள், இன்றுவரை மாற்றப்படாமல் செல்வாக்குடன் வலம்வருகிறார்கள். இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் 2015-ல் நடைபெற்றது. அதற்கு சுமார் ஆறு கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டது. அப்போது, கட்டடப் பணிகளுக்கு மட்டும்தான் வெளிப்படையாக ஒப்பந்தம் கோரப்பட்டது. எலெக்ட்ரிகல் பொருட்களுக்கு ஒப்பந்தம் கோரப்படவில்லை. காரணம், அந்த நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவர் எலெக்ட்ரிகல் கடை உரிமையாளர். கும்பாபிஷேகத்துக்கு பல கோடி ரூபாய் நன்கொடை வந்தது. அதன் விவரங்கள் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. அதில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. சட்டபூர்வமாக பதவி நீட்டிப்பைப் பெறாத இவர்கள், கோயில் நிதிகளைக் கையாள்வது சட்டவிரோதமானது” என்று கொந்தளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick