"ஆத்துல தண்ணீர் வந்ததால் விவசாயம் நாசமாச்சு!” - குமுறும் கரூர் விவசாயிகள்

‘ஆத்துல தண்ணீர் வரலை. அதனால், விவசாயமே இல்லை’ என்று விவசாயிகள் புலம்புவதைக் கேட்டிருக்கிறோம். கரூர் மாவட்ட விவசாயிகளோ, ‘‘அமராவதி ஆத்துல தண்ணீர் வந்ததால விவசாயமே நடக்கலை. 30,000 ஏக்கர் நிலங்கள் பாழாய்ப் போச்சு’’ என்று வேதனையுடன் குமுறுகிறார்கள்.

திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 240 கி.மீ ஓடும் அமராவதி, கரூர் மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடலூர் கிராமத்தில் காவிரி ஆற்றோடு சங்கமிக்கிறது. ஆற்றின் கரையை ஒட்டி நிலம் வைத்திருக்கும் சணப்பிரட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்ற விவசாயியிடம் பேசினோம். “எனக்கு மூணு ஏக்கர் நிலம் இருக்கு. எதைப் போட்டாலும் அமோக விளைச்சலைத் தரும் வண்டல் மண் பூமியா இருந்துச்சு. நான் சொல்றதெல்லாம் 15 வருஷத்துக்கு முன்னாடி. சாயக்கழிவுகளை அமராவதி ஆற்றில் திறந்துவிட்டதால், எங்க நிலம் விஷமாயிடுச்சு. மண் மலடாகிப்போச்சு. கரும்பு, நெல், வாழை என்று முப்போகம் விவசாயம் நடந்த காலம் போய், இப்போ மாடுகள் மேய்வதற்குக்கூட லாயக்கில்லாத கட்டாந்தரையாக இருக்கு. விவசாயிகள் இப்போ கஞ்சிக்கே வக்கத்துப்போய், சாயப்பட்டறைகளுக்குக் கூலிகளாகப் போறாங்க...” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick