கன்ட்ரோல் ரூம்

மணல் மாஃபியாவுடன் கூட்டு!

ணல் மாஃபியாக்களுடன் கூட்டுச் சேர்ந்து பணமழையில் நனைகிறார்கள், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை போலீஸார். மானாமதுரை டி.எஸ்.பி-யாக ‘என்கவுன்டர் புகழ்’ வெள்ளத்துரை இருந்தபோது, மணல் மாஃபியாக்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், சாதி உணர்வுடன் செயல்பட்டவர்கள், லஞ்சப் பேர்வழிகள் என 27 போலீஸாரை அடையாளம் கண்டு, அவர்களை வேறு மாவட்டங்களுக்குத் தூக்கியடித்தார். அவர் மாற்றலாகிப்போய்விட்டார். இப்போது, மானாமதுரை வட்டாரத்தில் திருட்டுச் சம்பவங்கள், சாதிய மோதல், மணல் திருட்டு, கொலைகள் போன்ற சம்பவங்களில் போலீஸாருக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கிறது என்கிறது அதிர்ச்சித் தகவல். உளவுத்துறை போலீஸாரும் தங்கள் கடமையை மறந்து, மணல் திருடர்களுடன் நெருக்கமாகச் செயல்படுவதாகப் புகார் பரபரக்கிறது. தென்மண்டல ஐ.ஜி சாட்டையைச் சுழற்றாவிட்டால், கச்சநத்தம் போன்ற பயங்கரச் சம்பவம் மீண்டும் நிகழும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் மக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick