கழுகார் பதில்கள்! - ரஜினிக்கும் கமலுக்கும் தெரியுமா அது?

டி.ஃபிரான்ஸிஸ், தூத்துக்குடி.
அரசியலில் வைகோ-50?

மறுசுழற்சி!

எம்.சங்கரபாண்டியன், வாணரமுட்டி, தூத்துக்குடி.
பெண்களுக்கு உயர் மதிப்பு, மரியாதை எந்த நாட்டில் தரப்படுகிறது. இந்தியாவில், தமிழகத்தில் அவர்களுடைய நிலை என்ன?


வளர்ந்த நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில்கூட, ‘ஆண்களுக்கு நிகரான ஊதியம் வேண்டும்’ எனப் பெண்கள் சமீபத்தில் போராடினார்கள். உலக அளவில் இன்னமும் பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் நூறு சதவிகிதம் கிடைக்கவில்லை. ‘பாலினச் சமத்துவம் பெற இன்னும் நூறு ஆண்டுகள் தேவைப்படும்’ என்று பாலின வேறுபாடு தொடர்பான 2017-ம் ஆண்டின் ஆய்வறிக்கை கூறுகிறது. உலக நாயகன் அமெரிக்காவே 49-வது இடத்தில்தான் இருக்கிறது. நதிகள், கடவுள்கள் என்று இந்தியாவில் பெண்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம். ஆனால், நடைமுறையில் நாம் இருப்பது 108-வது இடத்தில். ‘பெண்களும் சக உயிர்’ என்கிற எண்ணம் பிறக்கும் வரை, சம உரிமை பிறக்காது.

சந்திரசேகரன் எம்.டி., சென்னை.

விழிப்பு உணர்வு என்கிறார்களே... அது முதலில் யாருக்கு இருக்க வேண்டும்? மக்களுக்கா, அரசாங்கத்துக்கா?


மக்களுக்குத்தான். அப்போதுதான் அரசாங்கம் விழிப்பு உணர்வோடு இருக்கும்.

மன்னை கு.ஜோதிமணி, மன்னார்குடி.
அரசியல் கட்சி நடத்துவது எவ்வளவு கஷ்டம் என்று ரஜினிக்கும் கமலுக்கும் தெரியுமா... ரசிகர்கள் பலமே போதும் என்று நினைக்கிறார்களா?


அன்றைக்கு ‘தனி ஒருவன்’ எம்.ஜி.ஆர்., இன்றைக்கு ‘தனித்தனி ஒருவன்’களாக நிற்கிறார்கள் நடிகர்கள் பலரும். ரசிகர் கூட்டமும் பிரிந்தே கிடக்கிறது. இந்த பலம், கட்அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்ய மட்டுமே பயன்படும் என்பதை அறியாதவர்கள் அல்ல ரஜினியும் கமலும். ஓட்டுக்கு என்ன தேவை என்பதை அறிந்தே இருப்பவர்கள்தான் இருவரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick