மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் எழுதிய எம்.ஜி.ஆர் கட்டுரை!

ழுகார் வருவார் என்று காத்திருந்தோம். ஆனால், ‘டிங்... டிங்... டிங்’ என்று மொபைல் அலற... வாட்ஸ்அப் மூலமாகச் செய்திகளைத் தெறிக்கவிட்டுக்கொண்டிருந்தார் கழுகார்.

  ‘விழா வேந்தன்’ என்றால் அது கருணாநிதிதான். மறைவுக்குப் பிறகு, திரும்பிய பக்கமெல்லாம் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். கட்சிக்காரர்கள், இலக்கியவாதிகள், திரைத்துறையினரின் இந்த வரிசையில், தென்னிந்தியத் தொழில் வர்த்தகக் கழகமும் சேர்ந்துகொண்டுவிட்டது. செப்டம்பர் 22-ம் தேதி இரவு, சென்னையில் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது. கருணாநிதியைப் பற்றி அனைத்துத் தொழிலதிபர்களும் புகழ்ந்து தள்ளினர். கருமுத்து கண்ணன் பேசியபோது, ‘‘தளபதி... தளபதி...’’ என்று ஸ்டாலினை விளித்தது, பலரையும் புருவம் உயர்த்த வைத்தது. ‘‘இப்படி பெரும்பெரும் தொழிலதிபர்கள் ஒன்றுகூடி இந்த நிகழ்ச்சியை நடத்தியிருப்பது... அடுத்த ஆட்சி தி.மு.க-தான் என்பதைச் சொல்லாமல் சொல்வது போல் இருக்கிறது’’ என்றொரு பேச்சைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick