திருவாரூரில் சுலபமாக ஜெயிப்பேன்! - அழகிரி அதிரடி

“இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் திருவாரூரில் போட்டியிடுமாறு என்னிடம் பலரும் சொல்கிறார்கள். அப்படி நின்றால் சுலபமாக ஜெயித்துவிடுவேன் என்பதை, வரும் வழியில் சாலையின் இரண்டு பக்கமும் என்னைப் பார்ப்பதற்காகக் கூடிய கூட்டம் உணர்த்துகிறது. நான் அடிக்கடி இங்கு வரும் சூழ்நிலை வரும். தனிக் கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை. நான் தேர்தலில் நின்றால், எனக்கு எல்லாக் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கும்’’ என்று திருவாரூர் நிகழ்ச்சியில் அதிரடியாகப் பேசினார் மு.க.அழகிரி.

திருவாரூரில் அழகிரி ஏற்பாடு செய்திருந்த ‘கருணாநிதி புகழஞ்சலி’க் கூட்டம் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. அழகிரியின் மகன் துரை தயாநிதி மற்றும் ஆதரவாளர் மன்னன் உள்பட பலரும் அழகிரியுடன் வந்தனர். காட்டூரில் உள்ள தன் பாட்டி அஞ்சுகத்தின் நினைவிடத்துக்குச் சென்று அழகிரி மரியாதை செய்தார். அப்போது அருகில் இருந்தவர்களிடம், ‘‘2011 தேர்தலில் முதன்முறையாக திருவாரூர் தொகுதியில் அப்பா போட்டியிட்டார். அப்போது, இங்கு வந்து மரியாதை செலுத்திவிட்டுத்தான் பிரசாரத்தை அவர் தொடங்கினார். அவருடன் நானும் இங்கு வந்தேன். அதன் பிறகு வரவே இல்லை. நான் எனக்கான நீதியைக் கேட்டு நடத்திவரும் இந்தப் பயணத்தையும், பாட்டியின் நினைவிடத்தில் இருந்தே தொடங்குகிறேன்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick