சொந்தக் கட்சி எம்.பி-யை தெறிக்கவிட்ட தளவாய் சுந்தரம்!

டப்பாடி - பன்னீர் இடையேயான உரசல், அ.தி.மு.க-வுக்கும் பி.ஜே.பி-க்குமான பனிப்போர், கன்னியாகுமரி அ.தி.மு.க-வுக்குள் தளவாய் சுந்தரத்துக்கும் ராஜ்ய சபா எம்.பி விஜயகுமாருக்கும் இடையேயான பூசல் என அத்தனையையும் ஒரே மேடையில் வெளிச்சம்போட்டுக் காட்டும் நிகழ்ச்சியாக அமைந்தது, நாகர்கோவிலில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா.

‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு அடுத்ததாக மூன்றாம் தலைமுறை தலைவர் எடப்பாடி பழனிசாமி’ என்ற ரீதியில் இந்த நூற்றாண்டு விழா மேடை விளம்பரங்கள் அமைந்திருந்தன. செப்டம்பர் 22-ம் தேதி நடந்த விழாவுக்காக முந்தின நாள் இரவே நாகர்கோவில் வந்தார் முதல்வர். மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஆரல்வாய்மொழியிலும், தளவாய் சுந்தரம் சார்பில் தோவாளையிலும் என இரண்டு இடங்களில் வரவேற்பு நிகழ்ச்சிகள். நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய எடப்பாடி, அன்று இரவு தொடங்கி 22-ம் தேதி மதியம் வரை குமரி மாவட்டத்தின் முக்கிய நபர்களைச் சந்தித்தார். விழா நடந்த அன்று காலையில் நாகர்கோவில் வந்த துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு எளிமையான வரவேற்புதான் கிடைத்தது. விழா மேடையில் அமர்ந்த பன்னீர் முகத்தில் பூரிப்பு இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick