“அடிதடிகூட செய்யாமல் எப்படி அமைப்பு நடத்த முடியும்?” - அசால்ட் கருணாஸ் | Karunas arrest for controversial speech - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“அடிதடிகூட செய்யாமல் எப்படி அமைப்பு நடத்த முடியும்?” - அசால்ட் கருணாஸ்

காமெடி நடிகர் கருணாஸ்தான் கடந்த வாரம் முழுக்க ட்ரென்டிங்! ‘‘சட்டையைக் கழட்டி வெச்சிட்டு ஒண்டிக்கு ஒண்டி வர்றியா...’’ என்று தி.நகர் போலீஸ் துணை ஆணையர் அரவிந்தனுக்கு சவால் விட்டதில் ஆரம்பித்து, ‘சாதி’ப் பேச்சுக்காக ‘ஸாரி’ கேட்டு சரண்டர் ஆகி, பிறகு கைது செய்யப்பட்டது வரை சம்பவங்கள் அத்தனையும் டி.வி-க்களின் டி.ஆர்.பி-யை எகிறவைத்தன. 

கருணாஸ் பேச்சின் பின்னணி குறித்து நம்மிடம் குமுறினார்கள் வளசரவாக்கம், சாலிகிராமம் பகுதி மக்கள். அவர்கள், ‘‘முக்குலத்தோர் புலிப்படைங்கிற பேர்ல பத்துப் பதினைஞ்சு பேர் கொண்ட கும்பலோடதான் எப்பவும் வீதிகளில் கருணாஸ் வலம் வருவார். சினிமாவில் வருவதுபோல், போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலைகளின் குறுக்கே காரை நிறுத்தி உட்கார்ந்துகொண்டு கும்பலாகத் தண்ணி அடிப்பார்கள். தெருவில் போகும் அப்பாவிகளை அடித்து ரகளை செய்வார்கள். பிரபல நடிகரின் அசிஸ்டென்ட் ஒருத்தரை இப்படி அடிச்சு, விஷயம் போலீஸ் கேஸ் வரை போனது. சம்பந்தப்பட்ட நபரை மிரட்டி கேஸை வாபஸ் வாங்கச் செய்துவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick