மினி மீல்ஸ்

ஹெச்.ராஜாவுக்கு 110 போலீஸார்!

நா
கை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில், பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளரான ஹெச்.ராஜாவின் சகோதரி பிரபாவதி - ஹரிஹரநாதன் தம்பதிக்கு சஷ்டியப்த பூர்த்தி விழா நடைபெற்றது. அதில், ஹெச்.ராஜா கலந்துகொண்டார். எட்டுப் பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, இரண்டு தனிப்படை போலீஸாரால் தேடப்பட்டு வருவதாகச் சொல்லப்படும் ராஜாவுக்கு, முதல் நாள் மதியம் முதல் மறுநாள் வரை இரண்டு டி.எஸ்.பி-க்கள், எட்டு இன்ஸ்பெக்டர்கள் உள்பட 110 போலீஸார் பாதுகாப்பு அளித்தனர். இந்தப் போலீஸாரின் உணவுச் செலவுகளைக் கோயில் சிவாச்சாரியார் ஒருவரின் தலையில் கட்டிவிட்டனர். முன்னதாக, “ராஜா தலைமறைவு, ராஜா நாடு கடத்தல் என்று செய்திகள் வருகின்றன. நான் தலைமறைவாக இருக்க முடியுமா?” என போலீஸார் முன்னிலையில் பேட்டியளித்தார் ஹெச்.ராஜா.

இவர் ராஜா ரங்குஸ்கி இல்லே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick