பச்சைத்துண்டு மீசைக்காரர்!

ங்கெல்லாம் தமிழ் மொழிசார்ந்த போராட்டம் நிகழ்ந்ததோ, தமிழுக்கு அநீதி இழைக்கப்பட்டதோ, அங்கெல்லாம் தவிர்க்க இயலாத போராளியாக இடம்பெற்றவர்; தமிழுக்கு விழா எடுக்கப்பட்டால் பெருமிதத்துடன் பங்கேற்றவர் புலவர் கி.த.பச்சையப்பன். சுதந்திரப் போராட்டம், தமிழாசிரியர் இயக்கம், ஈழப் போராட்டம், மொழிப் போராட்டம் என வாழ்நாளெல்லாம் தமிழருக்காகப் போராடியவர். பூர்விகம் புதுச்சேரி, கொசப்பாளையம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியப் பட்டமும், மயிலம் கல்லூரியில் புலவர் பட்டமும் பெற்று தமிழாசிரியராகப் பணி செய்தவர். தமிழ் மொழிக்கு நிகராக ஆங்கிலப் புலமைபெற்றவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick