குட்டி சிவகாசியை எட்டிப்பிடிப்பது யார்? - குடியாத்தம் (தனி) | Gudiyatham by-election winning status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

குட்டி சிவகாசியை எட்டிப்பிடிப்பது யார்? - குடியாத்தம் (தனி)

1954-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில், காமராஜரை வெற்றிபெறச் செய்து முதலமைச்சராக்கிய பெருமைகொண்டது குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி. அதன்பின்னர், தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்ட குடியாத்தம், 2-வது முறையாக இப்போதுதான் இடைத்தேர்தலை எதிர்கொள்கிறது.

வேலூர் மாவட்டத்தில் இருக்கும் குடியாத்தம் ‘குட்டி சிவகாசி’ என்று அழைக்கப்படுகிறது.  இந்தத் தொகுதியில் தீப்பெட்டித் தொழில், பீடித் தொழில், கைத்தறி லுங்கி உற்பத்தி ஆகியவை பிரதானத் தொழில்கள். ஆனால், ஜி.எஸ்.டி வரிவிதிப்பால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேரணாம்பட்டு பத்தலப்பல்லி அணைக் கட்டுமானப் பணி கிடப்பில்போடப்பட்டுள்ளது. நரியம்பட்டு மலட்டாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதற்கு அரசாணை வெளியிட்டும், நிதி ஒதுக்கப்படவில்லை. சேம்பள்ளியை அடுத்த கொட்டாரமடுகு மோர்தானா கால்வாயின் குறுக்கே ஒரு மேம்பாலம், குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் அருகே கௌன்டன்யா மகாநதி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாகத் தரம் உயர்த்துவது ஆகிய கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுவருகின்றன.