சமபலத்தில் தி.மு.க, அ.தி.மு.க! - நிலக்கோட்டை (தனி) | Nilakottai by-election winning status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

சமபலத்தில் தி.மு.க, அ.தி.மு.க! - நிலக்கோட்டை (தனி)

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டைத் தொகுதி விவசாயத்தைப் பின்புலமாகக்கொண்ட தனித் தொகுதி. இங்கு வாழை ஆராய்ச்சி நிலையம்,  சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது இருபது ஆண்டுகாலக் கோரிக்கை. தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில், மேற்கண்ட இரண்டையுமே உறுதிமொழியாகத் தெரிவித்துள்ளது.

கட்சிரீதியாகப் பார்த்தால், நிலக்கோட்டை அ.தி.மு.க-வுக்குச் சாதகமான தொகுதி. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், நிலைமை மாறியிருக் கிறது. 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், வெற்றிபெற்ற அ.தி.மு.க வேட்பாளர் தங்கதுரைக்கும், தி.மு.க வேட்பாளர் அன்பழகனுக்கும் வித்தியாசம் 14,776 வாக்குகள். வெற்றிபெற்ற தங்கதுரை, தினகரன் அணிக்குப் போய்விட்டதால், தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

அ.தி.மு.க சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ தேன்மொழி சேகர் போட்டியிடுகிறார். ஏற்கெனவே, எம்.எல்.ஏ-வாக இருந்ததால், தொகுதி மக்களுக்கு இவர் நன்கு அறிமுகம். இவர் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது, காவிரி கூட்டுக்குடிநீர் உள்பட சில திட்டங்களைச் செயல்படுத்தினார் என்பது இவருக்கு ப்ளஸ். அ.ம.மு.க வேட்பாளர் ஓட்டுகளைப் பிரிப்பது மற்றும் அ.தி.மு.க கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசல் இவருக்கு மைனஸ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க