கூட்டணிக் கட்சிகள் ஒத்துழைத்தால் மட்டுமே வெற்றி! - பூந்தமல்லி (தனி) | Poonamallee constituency by-election winning status - Junior vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

கூட்டணிக் கட்சிகள் ஒத்துழைத்தால் மட்டுமே வெற்றி! - பூந்தமல்லி (தனி)

பூந்தமல்லி (தனி) சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வைத்தியநாதன், தி.மு.க சார்பில் முன்னாள் எம்.பி-யான கிருஷ்ணசாமி, அ.ம.மு.க சார்பில் ஏழுமலை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அ.தி.மு.க-வின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வைத்தியநாதன் ஏற்கெனவே இங்கு பஞ்சாயத்துத் தலைவராகவும், நிலவள வங்கித் தலைவராகவும் இருந்திருக்கிறார். தொகுதியில் நன்கு அறிமுகமானவர். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்மீதான அதிருப்தி இங்கு பலமாக எதிரொலிக்கிறது. வைத்தியநாதனின் பிரசாரமும் எடுபடவில்லை. ஆனாலும் தெம்பாக இருக்கிறார் வைத்தியநாதன். அவரிடம் பேசினால், “தொகுதிக்கு நான் புதுமுகம் இல்லை. தொகுதியில் எனக்கு நல்ல பெயர் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இது பலமான கூட்டணி. குறைந்தது 45,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’’ என்கிறார் உற்சாகமாக.