கைமாறுமா கோட்டை! - தஞ்சாவூர் | Thanjavur constituency by-election winning status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

கைமாறுமா கோட்டை! - தஞ்சாவூர்

தி.மு.க-வின் கோட்டையாக இருந்த தஞ்சாவூரைக் கடந்த இரண்டு முறை அ.தி.மு.க வென்று தன் வசமாக்கியது. இந்தமுறை என்னவாகும்?

அ.தி.மு.க சார்பில், வைத்திலிங்கத்துக்கு நெருக்கமான காந்தி, தி.மு.க சார்பில், டி.கே.ஜி நீலமேகமும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட ரெங்கசாமியே அ.ம.மு.க சார்பிலும்  போட்டியிடுகின்றனர்.

அ.தி.மு.க-வில் காந்தி, வேட்பாளராக நிறுத்தப்பட்டவுடன் ‘காந்தி நோட்டை’யே வேட்பாளராக நிறுத்திவிட்டனர் என்று அ.தி.மு.க-வினர் கமென்ட் அடிக்கிறார்கள். இது ஒருவகையில், காந்திக்கு ப்ளஸ்தான். அதேசமயம் அ.தி.மு.க-வில் சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கிறார்கள் சொந்தக்கட்சிக்காரர்கள். கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க-வின் ஒத்துழைப்பு சரியாக இல்லை. இவை எல்லாம் காந்திக்கு மைனஸ். காந்தியோ, ‘‘நான் கட்சிக்காக 30 வருடம் உழைத்தவன். இரட்டை இலைச் சின்னம் மிகப் பெரிய பலம். அ.ம.மு.க-வை நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. தி.மு.க வேட்பாளர்மேல் சொந்தக் கட்சிக்காரர்களே அதிருப்தியில் உள்ளனர். இவை எல்லாம் என்னை வெற்றிபெற வைக்கும்’’ என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க