பரமக்குடி பரமபதம்! - பரமக்குடி | Paramakudi by-election winning status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

பரமக்குடி பரமபதம்! - பரமக்குடி

ரமக்குடி தொகுதியில், அ.தி.மு.க சார்பில் சதன் பிரபாகர், தி.மு.க சார்பில் சம்பத்குமார் போட்டியிடுகின்றனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட டாக்டர் முத்தையாவே அ.ம.மு.க சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.

இதுவரை இந்தத் தொகுதியில், அ.தி.மு.க ஏழு முறையும், தி.மு.க, காங்கிரஸ், த.மா.கா ஆகிய கட்சிகள் தலா ஒரு முறையும் வென்றுள்ளன. அ.தி.மு.க சார்பில், ஐந்து முறை போட்டியிட்ட டாக்டர் சுந்தர்ராஜ் மூன்று முறை வெற்றிபெற்றுள்ளார். கடந்த 2016-ல் சுந்தர்ராஜுக்குப் பதில் வாய்ப்புக் கிடைக்கப்பெற்ற முத்தையா, வெற்றி பெற்றவுடன் தினகரன் அணிக்குச் சென்றுவிட்டார். இந்தமுறை மீண்டும் இடைத்தேர்தலில், டாக்டர் சுந்தராஜுக்கே வாய்ப்பு கிடைக்கும் நிலை இருந்தது. ஆனால், அ.தி.மு.க-வின் உள்கட்சிப் பூசலால், அவருக்குக் கிடைக்கவில்லை. முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த சதன் பிரபாகருக்கு சீட் கிடைத்தது. இதனால், தொகுதியிலுள்ள கட்சிக்காரர்கள் சோர்ந்துபோய் உள்ளனர். தொகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு தொகை கிடைக்காதது, நெசவாளர்களின் நிறைவேறாத கோரிக்கைகள்... இவை எல்லாம் அ.தி.மு.க வேட்பாளருக்கு மைனஸ். தொகுதி அ.தி.மு.க கோட்டை என்பது மட்டுமே ப்ளஸ்.