காங்கிரஸால் தி.மு.க-வுக்கு பாதகம் அ.தி.மு.க-வுக்கு சாதகம்! - சோளிங்கர் | CHOLINGAR constituency by-election winning status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

காங்கிரஸால் தி.மு.க-வுக்கு பாதகம் அ.தி.மு.க-வுக்கு சாதகம்! - சோளிங்கர்

சோளிங்கர் தொகுதியில், அ.தி.மு.க சார்பில் சம்பத், தி.மு.க சார்பில் அசோகன், அ.ம.மு.க சார்பில் டி.ஜி.மணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பேரூராட்சியான சோளிங்கரை நகராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும். தனித் தாலுகாவாக மாற்றவேண்டும் என்பதே தொகுதி மக்களின் கோரிக்கைகள். சுற்றுலா வளர்ச்சிக்காக நரசிம்மர் கோயிலில் கொண்டுவரப்பட்ட ‘ரோப் கார்’ திட்டம், ஆரம்பக்கட்டப் பணியுடன் முடக்கப்பட்டுள்ளது. காவேரிப்பாக்கத்தில் ‘ஜவுளிப் பூங்கா’ அமைப்பதுடன், விசைத்தறி மேம்பாட்டுக்காகக் கட்டணம் இல்லாத மின்சாரம் வழங்க வேண்டும் ஆகியவையும் தொழிலாளர்களின் நீண்டகால எதிர்பார்ப்பு.