சீமராஜா யார்? - சிவகங்கை | Sivaganga Lok Sabha constituency winning status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

சீமராஜா யார்? - சிவகங்கை

தொடர்ந்து ‘ஸ்டார் அந்தஸ்து’ தகுதியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது, சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி. அ.தி.மு.க கூட்டணியில் பி.ஜே.பி சார்பில் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் மோதுவதால் வழக்கமான தேர்தல் சூட்டைவிட, அனல் பறக்கிறது. 

சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை (தனி), காரைக்குடி, ஆலங்குடி, திருமயம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி. இங்கு தி.மு.க., அ.தி.மு.க தலா இரண்டு முறையும், காங்கிரஸ் ஒன்பது முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன. இதில், ப.சிதம்பரம் மட்டுமே ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரும் நிதித்துறை, உள்துறை என்று இந்தியாவின் ‘பவர்ஃபுல்’ மனிதராக வலம்வந்தார். ஆனால், தொகுதி கொஞ்சமும் வளர்ச்சி அடையவில்லை. இங்கிருந்து வேலை தேடி, உலகம் முழுவதும் பல லட்சம் பேர் சென்றுள்ளனர். உள்ளூர் வேலை வாய்ப்புக்கு மண்ணின் மைந்தர் எதுவுமே செய்யவில்லை என்ற கோபம், சிவகங்கை மக்களிடம் இருக்கிறது. இந்தநிலையில்தான் தன் வாரிசைக் களமிறக்கியுள்ளார் சிதம்பரம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க