மிஸ்டர் கழுகு: எட்டுத் தொகுதிகளில் ரெட் அலர்ட்! - பி.பி ஏற்றும் போலீஸ் ரிப்போர்ட் | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

மிஸ்டர் கழுகு: எட்டுத் தொகுதிகளில் ரெட் அலர்ட்! - பி.பி ஏற்றும் போலீஸ் ரிப்போர்ட்

கோடைக்காலம் அல்லவா... இம்முறை கழுகாருக்கு இளநீரைக் கொடுத்துவிட்டு, ‘‘உம்மைக் குளிர்விப்பதே, உம்மிடம் உள்ள சூடானச் செய்திகளை வாங்கத்தான்’’ என்றோம். கழுகார், ‘‘நிறையவே இருக்கிறது. குறித்துக்கொள்ளும்’’ என்று தகவல்களைக் கொட்டினார்...

‘‘ஊடகம் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் எடுக்கும் கருத்துக் கணிப்புகளில், ஆளும் கூட்டணிக்கு எதிரான முடிவுகள் வருவதால் ஆளும்தரப்பு ‘அலர்ட்’ ஆகியிருக்கிறது. திட்டமிட்டதைவிட அதிகமான பணத்தை இறக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது!’’

‘‘அதுதான் ஆம்னி பஸ்களிலும், அதிகாரிகளின் வாகனங்களிலுமே பணம்போவதாக ஏற்கெனவே சொன்னீரே?’’

‘‘அதிகாரிகள் என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லமுடியாது. போலீஸ் அதிகாரிகளின் வாகனங்கள்தான், இதற்கு அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றன என்கிறார்கள். கடந்த வாரத்தில், சென்னையிலிருந்து கொங்கு மண்டலத்துக்குப் பெரும்தொகையை ஏற்றிக்கொண்டு, காவல்துறை வாகனங்கள் சென்றதாக போலீஸ் வட்டாரத்திலேயேப் பேசிக்கொள்கிறார்கள்!’’

‘‘கோவையில் பொதுக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், ஓர் உயர் போலீஸ் அதிகாரி, மெடிக்கல் லீவ் எடுத்துக்கொண்டு பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டுவருவதாகச் சொன்னாரே?’’

‘‘ஆமாம்... அவர் ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரி. அவரும் எஸ்.பி அலுவலகத்தில் முக்கியமான பொறுப்பிலுள்ள ஒரு இன்ஸ்பெக்டரும்தான் இந்தப் பணப் பட்டுவாடா வேலைகளைச் செய்கிறார்களாம். ‘பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் அங்குள்ள எஸ்.பி–யை மாற்றாமல் இருப்பது ஏன்?’ என்று பலரும் கேட்கிறார்கள்.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க