கழுகார் பதில்கள்! | Kazhugar Questions And Answers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

கழுகார் பதில்கள்!

ஏ.காஜா மைதீன், நெய்க்காரப்பட்டி, பழனி.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மக்கள் யார் பக்கம்?


மக்கள் என்றால், ஒட்டுமொத்த மக்களையும் குறிக்கும். ஆனால், எந்தத் தேர்தலிலுமே தனிப்பட்ட ஒருவர் அல்லது ஒரு கட்சியின் பக்கம் மொத்த மக்களும் இருந்ததே இல்லை. ‘தேர்தலில் 4 பேர் நிற்கிறார்கள். 20 பேர் வாக்களிக்கிறார்கள். ஒருவர் அதிகபட்சமாக 6 வாக்குகள் பெறுகிறார். மற்ற மூவரும் மீதி வாக்குகளைப் பிரித்துப்பெறுகிறார்கள். 6 வாக்குகள் பெற்றவர் வெற்றி அடைந்ததாக அறிவிக்கப்படுகிறார். உண்மையில் 14 வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டவர்தான் மக்கள் பிரதிநிதி ஆகிறார். இது என்ன ஜனநாயகம்?’ என்று கேட்கிறார் தர்மபுரி வாசகர்@பரணிகுமரன்.ஜெ. ‘பொதுமக்களில், சுமார் 70 சதவிகிதத்தினர்  அரசாங்கக் கொள்கைகளை வகுப்பதில் எவ்விதத்திலும் தாக்கம் செலுத்த முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். இதில் வாக்குரிமை என்ன மாற்றத்தைத் தந்துவிடும்?’ என்று கேள்வி எழுப்புகிறார் தொம்பன்குளம் வாசகர் @ஞானப்பிரகாஷ்.

இதுதானே யதார்த்தம். ஆக, குறிப்பிட்ட ஒரு பிரிவின் ஆட்சிதான் எப்போதுமே நடக்கிறது. இதை வைத்து மக்கள் அவர்களின் பக்கம் என்றெல்லாம் சொல்லவே முடியாது. தற்போதைய தேர்தல் முறையை மாற்றிவிட்டு, வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்போதுதான் அனைத்து மக்களும் பங்கேற்கும் ஆட்சியாக அது இருக்கும்! அதாவது, 100 இடங்கள் கொண்ட சபைக்கான தேர்தல் என்று வைத்துக்கொண்டால், மொத்த வாக்குகளில் 60 சதவிகித வாக்குகளை வாங்கிய கட்சிக்கு 60 இடங்கள், 20 சதவிகித வாக்குகள் வாங்கிய கட்சிக்கு 20 இடங்கள், ஒரு சதவிகிதம் வாங்கிய கட்சிக்கு ஓரிடம் என்று பிரிக்கப்படும். இது, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் நடைமுறையில் உள்ளது. ஆனால், ஒரேமாதிரியாக இல்லாமல், அந்தந்த நாட்டுக்கு ஏற்ப இது வரையறுக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க