“விஜயகாந்த் இடத்தைப் பிடிக்க கமல் நினைக்கவில்லை!” | MAKKAL NEEDHI MAIAM Sripriya interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

“விஜயகாந்த் இடத்தைப் பிடிக்க கமல் நினைக்கவில்லை!”

ஸ்ரீபிரியா பளீர்

மலுடன் நீண்டகால நட்பில் இருப்பவர் ஸ்ரீப்ரியா. கமல் அரசியல் அவதாரம் எடுத்ததும், தன்னையும் அந்தப் பயணத்தில் இணைத்துக் கொண்டிருக்கிறார். மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினர் என்ற பொறுப்பில், மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்துவரும் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“நீங்கள் ஏன் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை?”

“அரசியல் களம் எனக்குப் புதிது. முதலில் நான் கள நிலவரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்த முறை நான் வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்றால், இந்த முறை நான் மக்களைச் சந்தித்து அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். என்னையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, தலைவர்  முடிவு எடுப்பதற்கு முன்பாகவே, இந்த முறை நான் போட்டியிடவில்லை என்கிற என் நிலைப்பாட்டை அவரிடம் தெரிவித்துவிட்டேன்.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க