அ.தி.மு.க கூட்டணியே எனக்குப் பிடிக்கலை... - அருண்ஜெட்லிக்குப் பொருளாதாரமே தெரியலை! | BJP Senior Leader Subramanian Swamy interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

அ.தி.மு.க கூட்டணியே எனக்குப் பிடிக்கலை... - அருண்ஜெட்லிக்குப் பொருளாதாரமே தெரியலை!

சுப்பிரமணியன் சுவாமி சுளீர்

பி.ஜே.பி-யில் இருந்துகொண்டே பிரதமர், அமைச்சர் என்று எல்லோரையும் சகட்டுமேனிக்கு விளாசுபவர் சுப்பிரமணியன் சுவாமி. இவரைப் பற்றித் தெரிந்ததனாலோ என்னவோ... அதை எல்லாம் அங்கு யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. சமீபத்தில் மதுரை, சோழவந்தான் அருகே தன் சொந்த ஊரான முள்ளிப்பள்ளத்தில் உள்ள குலசாமி கோயிலுக்கு வந்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘தற்போதுள்ள சூழலில், இந்திய அளவிலும், தமிழக அளவிலும் எந்தக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது?’’

‘‘மக்களவைத் தேர்தலில், பி.ஜே.பி தேசிய அளவில் தனி மெஜாரிட்டி பெரும். அக்கூட்டணி, தமிழகத்திலும் ஓரளவு வரும்.’’

‘‘டி.டி.வி தினகரனுக்குச் சின்னம் ஒதுக்குவதில் ஏன் இந்தத் தாமதம்?’’

‘‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி டி.டி.வி தினகரன் கட்சிக்குத் தேர்தல் ஆணையம், பொதுச் சின்னம் வழங்க வேண்டும்.  ஆனால், அவர் விரும்புகிற  சின்னம் இப்போது கிடைக்காது. இந்தத் தேர்தலில், போட்டியிட்ட பிறகு கிடைக்க வாய்ப்புண்டு.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க