மோடி, எடப்பாடி, ஸ்டாலின், ராமதாஸ்... வரிசையாக வறுத்தெடுத்த கமல்! | Kamal attacks to Modi, Edappadi, Stalin and Ramadoss - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

மோடி, எடப்பாடி, ஸ்டாலின், ராமதாஸ்... வரிசையாக வறுத்தெடுத்த கமல்!

க்கள் திரளை இரண்டாகப் பிரித்து, நடுவிலே அமைக்கப்பட்டிருக்கிறது நடைமேடை. அதில் ‘நாயகன்’ என்ட்ரி கொடுக்க, கரவொலி காதைக் கிழிக்கிறது. லேசாகப் பரவும் இருளைத் துடைத்தெடுப்பது போல, டார்ச் லைட் ஒளி, அங்குமிங்குமாக அலைபாய்கிறது. அரசியல்பேசும் ஒரு தமிழ்ச் சினிமாவுக்கான படப்பிடிப்புத் தளம் போலிருந்தது அந்தச் சூழல். ஆனால், அது ஓர் அரசியல்மேடை!

கோவை கொடிசியா மைதானத்தில் மார்ச் 24-ம் தேதியன்று, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், ஸ்ரீப்ரியா, கோவை சரளா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கூட்டணியில் உள்ள இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் ஆகியோர் பேசி முடித்தபின், மைக் பிடித்தார்  கமல்ஹாசன்.

சில தேதிகளைக் குறிப்பிட்டுப் பேச ஆரம்பித் தவர், ‘‘2016 நவம்பர் 8-ம் தேதி ‘பண மதிப்பிழப்பு’ என்கிற ஒற்றை வார்த்தையில், இந்தியப் பொருளா தாரத்தின் முதுகெலும்பை உடைத்தார்கள்’’ என்று மோடிமீதான தனது எதிர்ப்பை அழுத்தமாகப் பதிவு செய்து உரையைத் தொடங்கினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க