எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ் | Parliament Election Express News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

ஐடியா அன்புமணி... ஹைடெக் எடப்பாடி!

டப்பாடி பழனிசாமியின் பிரசாரம் ‘ஹைடெக்’காக மாறியிருக்கிறது. காதில் மைக் மாட்டிக் கொண்டு, அவர் பேசுவதை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். தர்மபுரி தொகுதியில் எடப்பாடி பிரசாரம் செய்தபோது, ஒரு கையில் மைக்கை வைத்துக்கொண்டு சுற்றுமுற்றும் திரும்பிப் பேச சிரமப்படுவதைப் பார்த்த அன்புமணிதான் இந்த ஐடியாவைக் கொடுத்தாராம். இதையடுத்தே, ‘சென்ஹெய்ஸர்’ என்கிற நிறுவனத்தின் நவீன மைக்கை முதல்வர் பயன்படுத்தத் தொடங்கினாராம். 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த மைக்கின் டிரான்ஸ்மீட்டர், வேட்டியின் பெல்ட்டில் மாட்டப்பட்டிருக்கும். இதனை ‘வைஃபை’ மூலமாக ஸ்பீக்கருடன் இணைத்துக்கொள்ளலாம்.