சிங்கப்பூரில், கம்பெனி ஆரம்பித்திருப்பது உண்மைதான்! | Arakonam DMK candidate Jagathrakshakan interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

சிங்கப்பூரில், கம்பெனி ஆரம்பித்திருப்பது உண்மைதான்!

ஜெகத்ரட்சகன் ஓப்பன் டாக்...

தி.மு.க-வின் ‘காஸ்ட்லி’ வேட்பாளர் ஜெகத்ரட்சகன், அரக்கோணம் தொகுதியில் போட்டியிடுகிறார். நெமிலி பகுதியில் பரபர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்...

‘‘சிங்கப்பூரில் உங்கள் குடும்பத்தினருக்குச் சொந்தமாக ‘சில்வர் பார்க் இன்டர்நேஷனல்’ நிறுவனம் இருப்பதாகவும், அதன் மூலமாக இலங்கையில், எண்ணைய்ச் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் 26 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் வாட்ஸ் அப்பில் வரும் தகவல்கள் உண்மையா?’’

‘‘சிங்கப்பூரில், ஒரு கம்பெனி ஆரம்பித்து இருக்கிறோம். அந்தக் கம்பெனியில், என் மனைவி மற்றும் மகன்கள் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். அவ்வளவுதான்... அதற்குள் பல கோடி ரூபாய்களை விமானத்திலும் கப்பலிலும் ஏற்றிக்கொண்டுபோய் இலங்கையில் வைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள் எதிரணியினர். அப்பட்டமான பொய் இது. அப்படி எல்லாம் ஒன்றும் செய்துவிட முடியாது.’’