கன்னத்தைக் குதறி... கழுத்தைக் கடித்து... | 7 Year Old Child Raped and Murdered In Coimbatore - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

கன்னத்தைக் குதறி... கழுத்தைக் கடித்து...

கோவையில் குழந்தைக்கு நேர்ந்த பாலியல் கொடுமை!

து கொங்கு மண்டலத்துக்குச் சோதனை காலம். கல்லூரிப் பெண்களையும் இல்லத்தரசிகளையும் குறிவைத்துப் பாலியல் தொந்தரவு கொடுத்த பொள்ளாச்சியைச் சேர்ந்த இளைஞர்கள் பிடிபட்டு ஒரு மாதம்தான் ஆகியிருக்கிறது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், கோவையில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயதுச் சிறுமிப் பாலியல் படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுரையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் விவரங்களை மறைத்துள்ளோம்.

கோவை துடியலூர் பன்னீர்மடை அருகே இருக்கிறது கஸ்தூரிநாயக்கன் புதூர் கிராமம். அங்குள்ள ஒரு தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள். மார்ச் 25-ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மூத்த மகள் மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அடுத்த நாள் காலை, மழலை மாறாத அந்தக் குழந்தையை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது. பிரேதப் பரிசோதனையில், அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது. தொடர்ந்து, “குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமியின் சடலத்தை வாங்கமாட்டோம்” என்று பெற்றோரும் உறவினரும் போராட்டத்தில் இறங்கினார்கள். இதைத் தொடர்ந்து நான்கு பேரிடம் தனிப்படைப் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.