ஒரே ஆண்டில் நான்கு மடங்கு லாபம்... - இது திருச்சி தில்லாலங்கடி! | Doubtful to Chendur Fincorp Trichy Thillai Nagar - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

ஒரே ஆண்டில் நான்கு மடங்கு லாபம்... - இது திருச்சி தில்லாலங்கடி!

பி.ஏ.சி.எல், எம்.ஆர்.டி.டி என மோசடி நிறுவனங்களின் திருவிளையாடல்கள் தமிழகத்தில் தொடர்கதையாகவே இருக்கிறது. திருச்சியைச் சேர்ந்த செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனம் கூடிய விரைவில் இந்தப் பட்டியலில் சேர்ந்தாலும் ஆச்சர்யமில்லை.

திருச்சி தில்லை நகரில் செயல்பட்டு வருகிறது செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனம். இந்த நிறுவனத்தில் ரூ.35,000-த்தை முதலீடு செய்தால், தினமும் ரூ.300 அல்லது வாரம்தோறும் ரூ.1,500 அல்லது மாதம்தோறும் ரூ.6,000 என ஓராண்டு கால முடிவில், ரூ.72,000 தருகிறது. இதுபோதாது என்று ஏற்கெனவே கட்டிய ரூ.35,000-த்துடன், ரூ.14,000 போனஸையும் சேர்த்துத் தந்து அசத்த, நீ, நான் என்று இந்த நிறுவனத்தில் பணத்தைக் கொட்டுகிறார்கள் மக்கள்.