பொள்ளாச்சி... கோவை... இப்போது சேலம்! - காம கொடூரர்களைக் காக்கிறதா போலீஸ்? | Sexual harassment in salem - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

பொள்ளாச்சி... கோவை... இப்போது சேலம்! - காம கொடூரர்களைக் காக்கிறதா போலீஸ்?

பொள்ளாச்சி சம்பவத்தின் நீட்சியாக நடந்த இன்னொரு கொடூரச் சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் அவரது வீட்டுக்கு இரண்டு மைல் தூரத்திலேயே இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் சாலையில், இரவு நேரத்தில் பெண்களை வழிமறித்து, பாலியல் கூட்டு வன்புணர்ச்சி செய்து அதைப் போட்டோ, வீடியோ எடுத்து நகை, பணம் பறித்திருக்கிறது காமக்கொடூர கும்பல். இவ்வழக்கை விசாரித்த சேலம் காவல்துறையும் பணம் பார்த்திருப்பதாக இப்போது புகார்கள் கசிகின்றன. நேரில் சென்று விசாரித்தோம்.

சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கொண்டலாம்பட்டி செல்லும் பைபாஸ் சாலையில், திருமகள் ரவுண்டானாவை அடுத்து பட்டர்ஃப்ளை பாலம் இருக்கிறது. இப்பாலத்தின் வழியாக நாமக்கல், கோவை, பெங்களூரு சாலை பிரிந்துசெல்கிறது. இந்தப் பாலத்துக்கு அடியில் புதர் மண்டிய மைதானம் இருக்கிறது. இந்தப் பாலத்துக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கும் இரண்டு மைல் தூரம்கூட இருக்காது. இங்கு இரவு நேரத்தில் பதுங்கிய ஒரு கும்பல், அந்த வழியாகச் செல்லும் பெண்களைக் குறிவைத்து வக்கிரத்தைக் காட்டிவந்திருக்கிறது.