“ஓட்டு போட்டா போடுங்க... போடாட்டிப் போங்க...” - தம்பிதுரை ‘பகீர்’ பிரசாரம்... | Thambidurai controversial speech in Karur campaign - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2019)

“ஓட்டு போட்டா போடுங்க... போடாட்டிப் போங்க...” - தம்பிதுரை ‘பகீர்’ பிரசாரம்...

ஓவியம்: அரஸ்

“பத்து வருஷமா எம்.பி-யாக இருந்து, எங்க ஊருக்கு என்ன செஞ்சுட்டீங்கன்னு இப்போ ஓட்டுகேட்டு வந்திருக்கீங்க? குடிக்கத் தண்ணி இல்லை. பஸ் வசதி இல்லை. இதெல்லாம் பண்ணாம, என்ன தைரியத்தில் எங்ககிட்ட ஓட்டுகேட்டு வந்தீங்க”-வாக்குக் கேட்டு வந்த தம்பிதுரையை மக்கள் சூழ்ந்துகொண்டு இப்படி வறுத்தெடுக்க, நொந்தேபோய்விட்டார் மனிதர். கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் தம்பிதுரை, அன்றையதினம்  தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள ஏமூர் புதூருக்கு ஓட்டுக் கேட்டுப்போனபோதுதான் இந்த வம்பு. இதனால், கோபம் அடைந்த தம்பிதுரை, “நீங்க ஓட்டுப் போட்டா போடுங்க, போடாட்டி போங்க. ஓட்டுக்காக உங்க கால்ல எல்லாம் விழமுடியாது” என்று பேசிய விவகாரம், கரூர் தொகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.