சி.பி.ஐ. கேஸ் எல்லாம் ஒண்ணுமே இல்லைங்க! - ஆறு வயதிலேயே பூத் சிலிப் எழுதினேன்! | Karti Chidambaram exclusive interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2019)

சி.பி.ஐ. கேஸ் எல்லாம் ஒண்ணுமே இல்லைங்க! - ஆறு வயதிலேயே பூத் சிலிப் எழுதினேன்!

சொந்தக் கட்சியிலும், சொந்த மண்ணிலும் எதிர்ப்பு அலைகளைக்கடந்து, சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகக்  களமிறங்கியிருக்கிறார் கார்த்தி சிதம்பரம். வேட்புமனு பரிசீலனைவரையிலும் பதற்றத்துடன் இருந்த அவர், அதன் பின்பு ரிலாக்ஸ் ஆகிவிட்டார். பிரசாரத்துக்கு ஸ்டாலின் வந்துச் சென்றபின், மனிதர் இன்னுமே தெம்பாகி விட்டார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

“சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்தமுறை  நீங்கள் போட்டியிட்டபோது, நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டீர்கள். இந்தமுறை உங்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?”

“சென்ற முறை தனி ஆளாக மக்களைச் சந்தித்தேன். இந்த முறை நிலைமை அப்படி இல்லை. இப்போது மக்கள் விரும்பும் கூட்டணி அமைந் திருக்கிறது. பெரிய படையுடன் செல்கிறேன். என்னுடைய பலமே கூட்டணிதான்.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க