தி.மு.க-வின் வெற்றியைத் தீர்மானிக்கிறாரா தினகரன்? | TTV Dinakaran helps to DMK Victory? - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2019)

தி.மு.க-வின் வெற்றியைத் தீர்மானிக்கிறாரா தினகரன்?

மிழகம், புதுவை இணைந்த 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் தமிழகத்தில் நடைபெறும் 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க-வின் வாக்குகளைக் கணிசமான அளவுக்குப் பிரிப்பார் டி.டி.வி தினகரன் என்று கணிக்கிறார்கள், அரசியல் பார்வையாளர்கள். இது, பல தொகுதிகளில் தி.மு.க கூட்டணியின் வெற்றிக்கு வலு சேர்க்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால், ‘தளபதி’ ஸ்டாலினின் ‘ஸ்லீப்பர் செல் தளபதி’ என தினகரனை வர்ணிக்கிறார்கள்.

அ.தி.மு.க அணி சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க அணி சார்பில் அதன் தலைவர் மு.க ஸ்டாலினும் தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பே, பல தொகுதிகளில் டி.டி.வி தினகரன் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தன் சின்னம் எதுவென்றே தெரியாத நிலையில் இருந்த தினகரனுக்கு, இப்போது பரிசுப் பெட்டி சின்னம் கிடைத்திருக்கிறது. இதனால், படு உற்சாகமாகப் பிரசாரத்தைத் தொடர்கிறது தினகரன் முகாம். அ.தி.மு.க., தி.மு.க என்கிற இரண்டு மெகா கூட்டணிகளின் பிரமாண்டமான பிரசாரங்களுக்கு மத்தியில், பலரின் கவனமும் இப்போது தினகரன்மீதுதான் இருக்கிறது.

அ.ம.மு.க-வின் பரிசுப்பெட்டி சின்னத்தை, ‘காலிப்பெட்டி… தகர டப்பா’ என்று அ.தி.மு.க-வினர் கிண்டல் அடிக்கிறார்கள். ஆனால், இந்த ‘தகர டப்பா’தான் பல தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களைக் காலிசெய்யப்போகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் மணியிடம் பேசினோம். “இந்தத் தேர்தலில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு சக்தியாக தினகரனைப் பார்க்கிறேன். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், இரட்டை இலை, உதயசூரியன் இரண்டையும் தோற்கடித்து, 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் ஜெயித்தார். வரப்போகிற தேர்தலுக்குக் கட்டியம் கூறிய தேர்தலாகவும் அதைப் பார்க்க லாம். ஜெயலலிதா இறந்தபிறகு, அ.தி.மு.க வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது. பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க சேர்ந்ததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அ.தி.மு.க-வில் இருந்த சிறுபான்மை வாக்குகளும், பி.ஜே.பி எதிர்ப்பு வாக்குகளும் இந்த முறை அந்தக் கட்சிக்கு விழாது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க