சொந்தப் பணத்தை செலவு செய்வேன்! - பாரிவேந்தர் உறுதி | IJK leader Parivendhar interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2019)

சொந்தப் பணத்தை செலவு செய்வேன்! - பாரிவேந்தர் உறுதி

‘வாரிசு அரசியல் கூடாது என்பதுதான் எங்கள் அடிப்படைக் கொள்கை. எனவே ஒருபோதும் தி.மு.க-வுடன் கூட்டணி சேரமாட்டோம்’ என்று பேசிவந்த இந்திய ஜனநாயகக் கட்சி இப்போது தி.மு.க கூட்டணியில் இருக்கிறது. பெரம்பலூரில், தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளராகக் களமிறங்கி வாக்கு வேட்டையாடிவரும் ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தரைச் சந்தித்தோம். 

‘‘பெரம்பலூர் தொகுதியை இரண்டாவது முறையாகத் தேர்வுசெய்ய என்ன காரணம்?’’

‘‘எனது மூதாதையர்கள் வாழ்ந்த ஊர் பெரம்பலூர். என் குலதெய்வக் கோயிலும் இங்குதான் உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இங்குதான் போட்டியிட்டேன். இதைவிட என்ன பரிச்சயம் வேண்டியுள்ளது? கூட்டணிக் கட்சியான தி.மு.க., ‘கள்ளக்குறிச்சி வேண்டுமா, பெரம்பலூர் வேண்டுமா?’ என்று கேட்ட போது கே.என்.நேரு, ‘நீங்கள் பெரம்பலூரில் நில்லுங்கள். கண்டிப்பாக உங்களை வெற்றிபெற வைக்கிறோம்’ என்று சொன்னார். மறுபேச்சே பேசாமல், இந்தத் தொகுதியைத் தேர்வு செய்துவிட்டேன். இத்தொகுதியின் நலத்திட்டங்களுக்காக அரசு பணத்தை மட்டும் நம்பியிருக்காமல், என் சொந்தப் பணத்தை மக்களுக்காகச் செலவுசெய்வேன். நான் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் இது உறுதி.’’