டி.டி.வி தனித்துவமானத் தலைவர்! - சரவண பவன் தீர்ப்பும்... ஜீவஜோதி அறிவிப்பும்! | Jeevajothii Interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2019)

டி.டி.வி தனித்துவமானத் தலைவர்! - சரவண பவன் தீர்ப்பும்... ஜீவஜோதி அறிவிப்பும்!

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில், ஹோட்டல் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து அளிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்து தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம். தேர்தல் பரபரப்புக்கு இடையே இந்தத் தீர்ப்பு குறித்தும் பெரிய அளவில் பேசப்பட்டது.

வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி அருகில் உள்ள ரஹ்மான் நகரில் குடியேறினார் ஜீவஜோதி. தற்போது அதே பகுதியில் மகளிர் தையலகம் ஒன்றையும், தன்னுடைய மகன் பெயரில் அசைவ ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார். ஜீவஜோதியின் கணவர் தண்டாயுதபாணி அப்பளம், ஊறுகாய் போன்ற உணவுப்பொருள்களைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்கிறார். ஜீவஜோதி விரைவில் அரசியல் கட்சி ஒன்றில் சேர இருப்பதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரைச் சந்தித்தோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க