தொடரும் ‘ரத்தக்கறை’... - கர்ப்பிணிகளை காவு வாங்கிய சுகாதாரத் துறை! | 15 Pregnant Women died for spoiled blood in GH Krishnagiri, Dharmapuri, Hosur - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2019)

தொடரும் ‘ரத்தக்கறை’... - கர்ப்பிணிகளை காவு வாங்கிய சுகாதாரத் துறை!

நான்கு மாதங்களில் 15பேர் சாவு

ரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளவில்லை. பொறுப்பற்ற இந்த அரசின் அலட்சியத்தின் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர் மருத்துவமனைகளில், கெட்டுப்போன ரத்தத்தை ஏற்றியதால் 15 கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்துவிட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி, மீண்டும் தமிழகத்தை பதறவைத்திருக்கிறது!  

மருத்துவக் கட்டமைப்பில் சிறந்த மாநிலம் என்று பெயர்பெற்றது தமிழகம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அரசு மருத்துவ மனைகள் நோயாளிகளைத் துச்சமென மதிப்பதுவும், அவர்களது உடல்நலத்தில் அலட்சியம் காட்டிவருவதும் இப்படியான பேரவலங்களுக்குக் காரணமாகிவருகிறது. பிரசவத்துக்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள், சிசுக்கள் இறக்கநேர்ந்தால், அதை ‘மெட்டர்னல் டெத்’ என்று குறிப்பிடுவார்கள். அப்படியான மரணங்கள் நிகழும்போது, அதுகுறித்து விவாதிக்கவும், ஆய்வுசெய்யவும் மாவட்ட, மாநில அளவில் மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் உள்ளன. அந்தக் குழுக்கள், மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்து, இறப்புக்கான காரணங்களைக் கண்டறியும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இந்த சரிபார்ப்பு முறை, முதன்முதலாக தொடங்கப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.