காங்கிரஸ் வியூகம்... கணக்குப் போடும் மோடி! - உளவுத்துறை சர்வே... உதறலில் பி.ஜே.பி. | Parliament Election Strategy of Congress and BJP - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/04/2019)

காங்கிரஸ் வியூகம்... கணக்குப் போடும் மோடி! - உளவுத்துறை சர்வே... உதறலில் பி.ஜே.பி.

- லியானா

‘‘மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசுக்கு மீண்டும் தனிப்பெரும்பான்மை ஆதரவு கிடைக்காது. மற்ற கட்சிகள் ஆதரவு அளித்தால் மட்டுமே மீண்டும் மோடியால் பிரதமராக முடியும்” என்று பி.ஜே.பி தலைமைக்கு நெருக்கமானவர்களே இப்போது சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். இதனால், மாற்றுப்பாதையில் புதிய வியூகங்களை அமைத்துவருகிறது பி.ஜே.பி. இன்னொரு பக்கம்... தேவைப்பட்டால் பிரதமர் ரேஸிலிருந்து வெளியேறியாவது, ஆட்சியைத் தக்கவைக்கும் சூட்சுமங்களை வகுத்துவருகிறது காங்கிரஸ்.

இதுதொடர்பாகப் பேசிய பி.ஜே.பி கட்சியின் மேலிடத்துக்கு நெருக்கமான சிலர், “2014-ம் ஆண்டு இருந்த மோடி அலை இப்போது இல்லை என்பதை பி.ஜே.பி உணர்ந்துள்ளது. ‘தேர்தலில் பி.ஜே.பி-க்கான வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?’ என்பதுகுறித்து இந்த ஆண்டு தொடக்கத்திலேயே, மத்திய உளவுத்துறை ஒரு சர்வே எடுத்தது. அதில், ‘200 தொகுதிகளுக்கும் கூடுதலாக பி.ஜே.பி கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். ஆனால், தனிப்பெரும் கட்சியாக பி.ஜே.பி ஆட்சி அமைப்பது சாத்தியம் இல்லை’ என்று சொல்லப்பட்டிருந்தது. 

கடந்தத் தேர்தலில், பி.ஜே.பி-க்கு பக்கபலமாக இருந்தது உத்தரப் பிரதேசம். அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில், 71  தொகுதிகளை எங்கள் கட்சி கைப்பற்றியது. ஆனால், இந்தமுறை அங்கே மாநிலக் கட்சிகளான சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி எங்களுக்கு மிகப் பெரியப் பாதிப்பை ஏற்படுத்தும். கடந்தமுறை எங்கள் பக்கம் இருந்த சந்திரபாபு நாயுடு அணி மாறிவிட்டார். இதை எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்பதுகுறித்து மோடியும் அமித்ஷாவும் இறுதிக்கட்ட யோசனையில் உள்ளார்கள்’’ என்றார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க