67 ஆண்டுகள்... 392 தேர்தல்கள்... - இந்தியத் தேர்தல்களை புரிந்துகொள்வோம்! | Book: The Verdict – Decoding India’s Elections - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/04/2019)

67 ஆண்டுகள்... 392 தேர்தல்கள்... - இந்தியத் தேர்தல்களை புரிந்துகொள்வோம்!

சித்தார்த்தன் சுந்தரம்

2019, ஏப்ரல் 11-ம் தேதி,  இந்திய மக்களவைக்கான 17-வது தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு ஆரம்பமாகிறது. இந்தநேரத்தில் வெளிவந்திருக்கிறது ‘The Verdict – Decoding India’s Elections’ (தீர்ப்பு - இந்தியத் தேர்தல்களைப் புரிந்துகொள்ளுதல்) புத்தகம். இந்தியாவில், இதுவரை நடைபெற்ற 392 தேர்தல்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நூலை எழுதியிருக்கிறார்கள் முன்னோடி அரசியல் ஆய்வாளர்களான பிரணாய்ராய் மற்றும் தொராப் சொபாரிவாலா.

மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் 376, மக்களவைக்கான தேர்தல்கள் 16 என்று கடந்த 67 ஆண்டுகளாக நடத்தப்பட்டிருக்கும் 392 இந்திய ஜனநாயகத் திருவிழாக்களை படம் பிடித்துக் காட்டுகிறது புத்தகம். மேற்கண்ட தேர்தல்களை மூன்று கட்டங்களாகப் பிரித்து, ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள் நூலாசிரியர்கள். 1952 முதல் 1977 வரை 25 வருடங்கள் முதல் காலகட்ட மாகவும், 1977 முதல் 2002 வரை இரண்டாவது காலகட்டமாகவும், 2002 முதல் 2019 வரை மூன்றாவது காலகட்டமாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன.

புத்தகத்திலிருந்து சில சுவாரஸ்யமான செய்திகள்...

1952 முதல் 1977 வரை நடந்த தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தொகுதிக்கு வந்தாலும் வராவிட்டாலும், சேவை செய்தாலும் செய்யாவிட்டாலும் பெரும்பாலும் திரும்பத்திரும்பத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்தலுக்கு முன்பு ஆட்சியிலிருந்த கட்சிகளே 80 சதவிகிதம் மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டன. இதற்குக் காரணம், சுதந்திரத்துக்குப் பிறகு புதிய அரசு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை, அபிமானம், தேச விடுதலையின் தாக்கம். தவிர, அந்தக் காலகட்டத்தில், ஊடகப் பரவலாக்கமும் கிடையாது. 1977 முதல் 2002 வரை நடந்தத் தேர்தல்களில் 70 சதவிகித அரசுகள் மக்களால் தூக்கி எறியப்பட்டிருக்கின்றன. பொறுமையும், நம்பிக்கையும் இழந்த மக்களின் கோபமும், ஊடகத்தின் பரவலாக்கமும் இதற்குக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க