“தி.மு.க தேர்தல் அறிக்கையே என் பலம்!” - தமிழச்சி தன்னம்பிக்கை... | South Chennai DMK Candidate Thamizhachi Thangapandian interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/04/2019)

“தி.மு.க தேர்தல் அறிக்கையே என் பலம்!” - தமிழச்சி தன்னம்பிக்கை...

தி.நகர் நடேசன் பூங்கா அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல். அந்த வழியாக வாக்குசேகரிக்க ஜீப்பில் வருகிறார், தமிழச்சி தங்கபாண்டியன். அதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. உடனே, மக்களைப் பார்த்து புன்முறுவலுடன் ‘‘சாரிங்க... சாரி... சாரி’’ என்று கூறுகிறார் தமிழச்சி. அடுத்த ஒரு சந்திப்பிலும் போக்குவரத்து நெரிசல். அங்கேயும் மக்களைப் பார்த்து, மன்னிப்புகேட்கிறார் தமிழச்சி. அருகில் இருந்த கட்சிக்காரர் ஒருவர், “நீங்க ஓட்டுக்கேட்க வந்தீங்களா.... இல்லை, சாரி கேட்க வந்தீங்களா...” என்று கமென்ட் அடிக்க, அங்கு ஒரே சிரிப்பலை!

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் தமிழச்சி தங்கப்பாண்டியன், பாரம்பர்யம் மிக்க தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை தங்கப்பாண்டியன், தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்; சகோதரர் தங்கம் தென்னரசு முன்னாள் அமைச்சர். ஜீப்பைவிட்டு இறங்கி தி.நகரில் உள்ள குடிசைப் பகுதிக்குள் நுழைந்த தமிழச்சிக்கு, அங்குக் கூடியிருந்த பெண்கள் ஆரத்தி எடுத்தனர். பிரசாரத்துக்கு மத்தியில் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க