மனோஜ் பாண்டியனை எதிர்க்கும் பெரியப்பா! - களத்தில் மோதும் குடும்பம்! | ADMK candidate Manoj Pandian family contest in Tirunelveli - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/04/2019)

மனோஜ் பாண்டியனை எதிர்க்கும் பெரியப்பா! - களத்தில் மோதும் குடும்பம்!

‘நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் மனோஜ் பாண்டியனைத் தோற்கடிக்க வேண்டும்’ என்ற ஒரே நோக்கத்துடன் தேர்தல் கோதாவில் களமிறங்கியிருக்கிறார், பால் சாலமோன் பாண்டியன் என்கிற பி.எஸ்.பாண்டியன். இவர், அ.தி.மு.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் சபாநாயகருமான பி.ஹெச்.பாண்டியனின் மூத்த சகோதரர் என்பதுதான் பரபரப்பின் உச்சம்.
நெல்லைத் தொகுதியில், பி.ஹெச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டதும் அவரை எதிர்ப்பதற்காகக் கோவையிலிருந்து நெல்லைக்கு வந்து மனுத்தாக்கல் செய்துள்ளார் பி.எஸ்.பாண்டியன். இதுகுறித்து பால் சாலமோன் பாண்டியனிடம் பேசினோம்.